புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்துடன் மோதுண்டதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலையைச்சேர்ந்த இருவர் மட்டக்களப்பிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு தாழங்குடா வழியாக மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த போது தாழங்குடா பிரதான வீதியில் வைத்து இவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் மின் கம்பமொன்றுடன் மோதுண்டதில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்தார்.

உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த குருகுலசிங்கம் கோகுல்தாஸ்(28) என்பவர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த கந்தசாமி குலேந்திரன் (26) என்பவர் எனவும் இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top