இந்தியாவில் வெளிநாடு சென்ற கணவர் திரும்பி வருவதற்குள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பெண் என்ஜினியர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் பெருமாள்சாமி. இவருக்கும் இவரது உறவினரான கோவில்பட்டி
பக்கமுள்ள நாலாட்டின்புதூரைச் சேர்ந்த அய்யாலுசாமி மகள் கீதாவுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டு சென்னையில் தனிக்குடிதனம் நடத்தி வந்தனர். கீதா என்ஜினியர் என்பதால் அங்கு ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள்சாமி துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்றுள்ளார். இதற்கிடையே தனது பெற்றோர் ஆலோசனைப்படி கீதா தனது உறவினரான அருண் குமாரை தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து கடந்த 30.1.2012 அன்று திருமணம் செய்து கொண்டார். கீதாவுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என நாலாட்டின்புதூர் வி.ஏ.ஓ. ராஜேந்திரன் என்பவர் சான்று அளித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெருமாள்சாமி துபாயில் இருந்து திரும்பி வந்துள்ளார்.
மேலும் அவர் கீதாவின் பெற்றோரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பெருமாள்சாமியை மிரட்டி விரட்டியுள்ளனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அதில், கீதா தன்னை திருமணம் செய்து கொண்டதை மறைத்து வேறொருவரை மணந்துள்ளதாகவும், அவருக்கு தான் கொடுத்த 40 பவுன் நகையை மீட்டு தரும்படியும், இதனை கேட்க சென்ற தன்னை கொன்று விடுவதாக மிரட்டியது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரித்த அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், எஸ்.ஐ. ஞானசெல்வம் ஆகியோர் கீதா, அவரது பெற்றோர் அய்யாலுசாமி, குருவம்மாள், 2வது கணவர் அருண் குமார், அவரது பெற்றோர் காசி, லட்சுமி, அண்ணன் ராஜ்குமார், கீதாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என போலி சான்றிதழ் கொடுத்த நாலாட்டின்புதூர் வி.ஏ.ஓ.
ராஜேந்திரன், பதிவு திருமணத்திற்கு சாட்சியாக இருந்த ராஜகோபால், ராமசந்திரன் மற்றும் பழனிச்சாமி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக