புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும்.

இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்படுவதாக மேற்படி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 15 வீதமானவர்களே செயல்களற்றவர்களாக காணப்படுகின்றனர்.


சேர்பியா, ஆர்ஜன்டினா, மைக்ரோனேஸியா, குவைத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்கா இப்பட்டியலில் 46 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள் அதிக செயலற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இக் கணிப்பீட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளதானது செயலற்றவர்களாக உள்ள மக்களை சுறுசுறுப்பானவர்களாக இயங்கச் செய்வதற்கு வழிவகுக்குமென கருதப்படுகிறது.

முதல் 20 இடத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்

20 பூட்டான்: 52.3%
 19. தென் ஆபிரிக்கா 52.4%
 18. அயர்லாந்து : 53.2%
 17. இத்தாலி: 54.7%
 16. சைபிரஸ்: 55.4%
 15. துருக்கி: 56.0%
 14. ஈராக்: 58.4%
 13. நமீபியா: 58.5%
 12. டொமினிக்கன் குடியரசு: 60.0%
 11. ஜப்பான்: 60.2%
 10. மலேசியா: 61.4%
 9. ஐக்கிய அரபு குடியரசு: 62.5%
 8. பிரிட்டன்: 63.3%
 7. குவைத்: 64.5%
 6. மைக்குரோனிசியா: 66.3%
 5. ஆர்ஜென்டினா: 68.3%
 4. சேர்பியா: 68.3%
 3. சவூதி அரேபியா : 68.8%
 2. சுவாஸிலாந்து: 69.0%
 1. மால்டா: 71.9%

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top