ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்ற கணக்கு, நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி படத்தில் இருந்து தான் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார் அசின்.இது குறித்து அசின் கூறுகையில், நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி(2008) படத்தில் இருந்து தான் இந்த ரூ.100 கோடி வசூல் கிளப்
தொடங்கப்பட்டது.
எனது முதல் இந்தி படமே ரூ.100 கோடி வசூல் செய்தது. கதாநாயகிகளை பொறுத்த வரையில் ரூ.100 கோடி வசூல் கிளப்பை தொடங்கியள் நான் தான் என்று உணர்கிறேன்.
ஆனால் அதை வைத்து நான் ஒரு போதும் விளம்பரம் தேடியதில்லை. நான் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் வெற்றிப் படங்களாகும்.
எனக்கு தற்பெருமை அடிக்கப் பிடிக்காது. அது என் குணமே இல்லை. பணம் எவ்வளவு வருகிறது என்பதை பார்ப்பது எனது வேலையில்லை.
அந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் விட்டுவிட்டு நடிப்பைப் பற்றி மட்டுமே நடிகர், நடிகைகள் கவலைப்பட வேண்டும்.
ரெடி, போல் பச்சன், ஹவுஸ்புல் 2 போன்ற நகைச்சுவை படங்கள் அடுத்தடுத்து கிடைத்தது தற்செயலானது. நகைச்சுவை தவிர பிற படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக