புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லாஸ் வேகாஸுக்கு ஓய்வு எடுக்கச் சென்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரியை இளம்பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இங்கிலாந்து அணியின் அம்பாசடராக இருந்த இளவரசர் ஹாரி ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் லாஸ் வேகாஸில் உள்ள என்கோர் பீச் கிளப்புக்கு சென்றது குறித்த தகவல் காட்டுத்தீ போன்று பரவிவிட்டது.

முன்னதாக அவர் எம்ஜிஎம் கிராண்ட் ஹோட்டலின் வெட் ரிபப்ளிக் என்னும் பார்ட்டிக்கு சென்றார். அங்கு சிவப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்த ஹாரியை பிகினி அணிந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர். எம்ஜிஎம் கிராண்ட ஹோட்டல் வெட் ரிபப்பளிக் என்ற பெயரில் வாரத்தில் 4 முறை ‘தண்ணீர்’ பார்ட்டி கொடுக்கும். 2 நீச்சல் குளங்கள் அமைந்துள்ள இடத்தில் நடக்கும் இந்த பார்ட்டிக்கு 1,600 பேர் வரை வருவார்கள். அத்தகைய பார்ட்டிக்கு தான் ஹாரி சென்றுள்ளார். அங்கு வந்திருந்த பெண்களில் தங்க நிற முடியுள்ள நீல நிற பிகினி அணிந்திருந்த ஒரு இளம்பெண் மீது ஹாரியின் பார்வை விழுந்துள்ளதுஅவருடன் இரண்டு பாதுகாவலர்கள் சென்றிருந்தபோதிலும் அவர்களையும் தாண்டி பெண்கள் ஹாரியை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். இந்த பார்ட்டிக்கு பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் சென்றிருந்தார். ஆனால் அவர் ஹாரியை சந்தித்து பேசவில்லை..

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top