ரஷ்யாவில் 26 வயது இளம் பெண் தனது பிராவைக் கழற்றி அதை வைத்து பக்கத்து வீட்டு தாத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து கைதாகியுள்ளார்.ஜகமென்ஸ் என்ற ஊரைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இவரது பக்கத்து வீட்டில் 65 வயது தாத்தா ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று
அந்த இளம் பெண்ணைத் தேடி அவரது காதலன் வந்துள்ளார். இருவரும் மது அருந்த தீர்மானித்தனர். ஆனால் அந்தப் பெண்ணிடம் பணம் இல்லை.
இதையடுத்து பக்கத்து வீட்டு தாத்தாவை அணுகி, மது அருந்த தன்னிடம் பணம் இல்லை, கொஞ்சம் கடன் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் தாத்தாவோ பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.
இதையடுத்து கோபமடைந்த அந்த இளம் பெண் அந்த தாத்தாவை போட்டு சரமாரியாக அடித்துள்ளார். முகத்தில் குத்தியுள்ளார். அப்படியும் ஆத்திரம் தீரவில்லை. உடனே தனது பிராவைக் கழற்றி அதைக் கொண்டு தாத்தாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்த முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.
தாத்தாவைக் கொலை செய்த பின்னர் அந்தப் பெண்ணும், காதலனும் தப்பியோட முயன்றனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர். போலீஸார் வந்து பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
பிராவால் முதியவரைக் கொன்ற அப்பெண்ணுக்கு 15 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக