புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்புக்கும், பதுளைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ''பெடிமெனிகே'' புகையிரதத்தில் பயணம் செய்த  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரான்ஸ் நாட்டுப் பெண், பதுளை செல்லும் நோக்கில் வேறு சிலருடன் ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் இருந்து 'பொடி மெனிகே' ரயிலில் ஏறியுள்ளார்.

இந்நிலையில், புகையிரதத்தில் உள்ள உணவகத்தில் பணி புரியும் ஊழியர், மென்பானங்களை விற்பனை செய்ய எடுத்து செல்லும் போது, பிரான்ஸ் பெண்ணுடன் பழகியுள்ளதுடன் அவரை வல்லுறவுறக்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த ஊழியரை புகையிரதத் திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது. சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top