புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் உதவி கோரி அழைத்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹேல்வுட் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி பாரஸ்டர்(வயது 41) 13 வருடமாக பணியாற்றி வருகிறார். தற்போது மெர்சிசைட் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவரது காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது. தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலில் சண்டையாகி விட்டதாகவும், உதவ முன்வருமாறும் அப்பெண் கூறினார். இதையடுத்து பாரஸ்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த வீட்டுக்குச் சென்ற பாரஸ்டர், வீட்டின் மேல் மாடியில் ஆய்வு நடத்தினார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். உங்களது மார்பகம் உண்மையானதா, அல்லது டூப்ளிகேட்டா, அதை நான் தொடடுப் பார்க்கலாமா என்று கேட்டு அத்து மீற முயன்றுள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அப்பெண்.

அதன் பின்னர் அப்பெண்ணுக்கு அடிக்கடி போன் பேசி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். ஒருமுறை மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டார் பாரஸ்டர். இதனால் கோபமடைந்த அப்பெண், வீட்டுக் கதவை அறைந்து மூடினார்.

அப்போது பாரஸ்டரின் கால் விரல் சிக்கி நசுங்கிப் போய் விட்டது. பின்னர் நாயை அவிழ்த்து விடுவேன் என்று அப்பெண் மிரட்டியதைத் தொடர்ந்தே அங்கிருந்து அகன்றுள்ளார் பாரஸ்டர்.

அப்படியும் விடாமல் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ஆபாசப் பட நடிகைகள் பலரைத் தெரியும். நீயும் அதில் சேர்ந்தால் பெரும் பணம் பார்க்கலாம் என்று பேசியுள்ளார்.

மேலும், பொலிஸ் ஆவணங்களை திருட்டுத்தனமாக ஊடுறுவி அதில் இருந்த பல்வேறு பெண்கள் குறித்த ரகசியத் தகவல்களையும் சேகரித்துள்ளார்.

இவர் மீதான புகார்களைத் தொடர்ந்து பாரஸ்டர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன் மீதான புகார்களை பாரஸ்டர் மறுத்தார்.

விசாரணைக்குப் பின்னர் தற்போது பாரஸ்டருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top