கலப்பட இருமல் மருந்து குடித்த 12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளது. இங்குள்ள கடைகளில் இருமல் மருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த சிலர் போதைக்காக இருமல் மருந்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று ஒரு கடையில் 20 பேர் இருமல் மருந்தை வாங்கி உட்கொண்டனர். இந்த மருந்தை குடித்த சில நிமிடங்களில் நான்கு பேர் இறந்து விட்டனர்.
மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
மேலும் ஏழு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலப்பட இருமல் மருந்தை உட்கொண்டதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக