கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் 13 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக அப்பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தலச்சேரி தார்மடத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரின் மகள்கள் சாரு, சரண்யா. இவரது மகன் ரமேஷ். மூத்த மகள் சாரு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இளைய மகள் சரண்யா 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற சரண்யா மாலையில் வகுப்புகள் முடிந்த பிறகும் வகுப்பறையிலேயே இருந்திருக்கிறார். இது குறித்து ஆசிரியை விசாரித்த போது சரண்யா பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
தமது சகோதரி சாருவை தமது அப்பா, அண்ணன், தாய்மாமன்கள் ஆகியோர் பலாத்காரம் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடந்து 2 ஆண்டுகளாக தம்மையும் தந்தையும் அண்ணனும் பலாத்காரம் செய்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதால் சரண்யாவின் தந்தை, அண்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக