புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

. உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.
இத்திருமணம் கல்கிசையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று காலை மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றது.

விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
ஊடகங்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கவில்லை.
மணமகள் மலீகா. எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய விடயம் என்னவென்றால் இவர் மூன்றாவதாக தெரிவு செய்து உள்ள மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண் என்பதுதான். மலீகா ஒரு நடிகையும் ஆவார். அண்மையில் வெளியாகி ஒரு கலக்குக் கலக்கிய சுப்பர் சிக்ஸ் என்கிற சிங்கள திரைப்படத்தில் பவோடா சந்தீபனி, அருணி போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்து இருந்தார்.
ஆயினும் அடுத்த வாரங்களில் கல்கிசை ஹோட்டலில் மிக பிரமாண்டமான விருந்துபசாரம் ஒன்றை மணமக்கள் நடத்த உள்ளார்கள். மணமகள் மலீகாவின் பிறந்த தினத்தோடு சேர்ந்ததாக இக்கொண்டாட்டம் ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளது.
சனத்தின் இரண்டாவது மனைவி சந்திரா. முன்னாள் விமானப் பணிப் பெண். இருவருக்கும் மூன்று சிறுவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் விவாகரத்துக் கோரி வழக்கிட்டு இருந்தார்.







வழக்கு நடவடிக்கைகள் இன்னும் முடிவடைந்து விடவில்லை. சனத்தின் முதல் மனைவியும் விமானப் பணிப் பெண்தான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top