புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நாட்டின் பல பிரதேசங்களிலும் எற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை எட்டுப் போர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கம் மற்றும் குடியிருப்புகளின் மேல் மண் சரிந்து வீழ்ந்த காரணங்களினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக களனி கங்கையை அண்டிய மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதை இன்று காலை 7 மணி முதல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு ஆபாயம் ஏற்பட்டதன் காரணமாக இப்பாதை கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top