தொடர்ச்சியாக தலைமுடிக்கு சாயம் பூசி வந்த பெண் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரிட்டனின் யார்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஜூலி மெக்கேப்(வயது 38). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் பல ஆண்டுகளாக தலைமுடிக்கு சாயம் பூசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திடீரென இவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில நாட்களிலேயே கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஓராண்டாக மருத்துவமனையில் இருந்த ஜூலி, கடந்த மாதம் இறந்து விட்டார்.
ஜூலி பயன்படுத்திய தலை சாயத்தில் உள்ள "பாரா பீனைல் எனிடியாமைன்" என்ற ரசாயனம் தான், இவரது மரணத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக