இந்தியாவில் தூத்துக்குடி அருகே பிறந்து 2 வாரங்களே ஆன பெண் குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கனி. இவருக்கு 2 வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி விருத்தாச்சலத்தில் வேலைபார்க்கும் தனது கணவர் ஜோசப்பிடம் கனி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையைப் பார்க்க அவர் வரவில்லை.
இதனால் விரக்தி அடைந்த பிரான்சிஸ் கனி, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குடும்பத் தகராறே தற்கொலைக்கு காரணம் என முதல்கட்ட தெரியவந்துள்ளது.
Home
»
»Unlabelled
» இந்தியாவில் தூத்துக்குடி அருகே பிறந்து 2 வாரங்களே ஆன பெண் குழந்தையுடன் தாய் தற்கொலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக