தன் மனைவி ஒரு ஆண் என்பதை 19 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளார் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ஜான்(வயது 64). இவர் இந்தோனேஷியாவை சேர்ந்த மோனிகா என்பவரை, 1993ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
48 வயதாகும் மோனிகாவுக்கு குழந்தை இல்லை, எனினும் ஜான் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் முதல் மனைவி மூலம் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் மோனிகாவுக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு ஜானுக்கும், மோனிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நைட் கிளப்புகளில் மோனிகா குட்டை பாவடை அணிந்து திரிவதாக ஜானின் நண்பர்கள் கூறியுள்ளனர். மோனிகா மீது சந்தேகமடைந்த ஜான், அவருடன் சண்டை போட்டுள்ளார்.
அப்போது தான் மோனிகா, நான் பெண்ணே அல்ல. பிறக்கும் போது ஆணாக இருந்தேன். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினேன் என கூறியுள்ளார்.
இதனால் வெறுப்படைந்த ஜான், மோனிகாவை வீட்டை விட்டு வெளியேற்றும் வகையில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்து விட்டதுடன், விவாகரத்துக்கு பிறகு தான் அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என தெளிவாக கூறிவிட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக