சீனாவை சேர்ந்த லியன்திங் ஆடைகள் வடிவமைப்பதில் மிகவும் கை தேர்ந்தவர்.இவர் பெண்களுக்கான கவர்ச்சியான நாகரீக ஆடைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.இவருடைய நிறுவனத்தை பார்வையிட அவருடைய தாத்தா லியூ கூன்பிங்(வயது 72) சென்றார்.
அங்கு தயார் நிலையில் இருந்த ஆடையொன்றை போட்டு பார்க்கட்டுமா? என்று பேத்தியிடம் கேட்க அவரும் ஒப்புக் கொண்டார்.
அந்த ஆடை லியூவிற்கு மிகவும் கச்சிதமாகவே இருந்ததுடன், பெண் மொடல் போலவே காட்சி தந்தார்.
இதனால் ஆச்சரியம் அடைந்த பேத்தி, பலவிதமான ஆடைகளை உடுத்த செய்து படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ஏராளமான வாடிக்கையாளர்கள், கடைக்கு வந்து அலைமோத ஆரம்பித்துள்ளனர்.
இதுபற்றி லியன்திங் கூறுகையில், தாத்தாவின் மொடலுக்கு பிறகு விற்பனை 5 மடங்குக்கு மேல் உயர்ந்து விட்டது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக