நடிகர் அஜீத்துக்கு மீண்டும் முதுகில் அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. சண்டைக் காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் இந்த அறுவைச் சிகிச்சை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேஸ் வீரரான அஜீத், ஏற்கெனவே விபத்துக்களைச் சந்தித்தவர். பல முறை முதுகில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.
தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிப்படாத படத்தில் நடித்துவரும் அஜீத், கடந்த வாரம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியின் மீண்டும் விபத்துக்குள்ளானார்.
அதில் அவருக்கு காலில் அடிபட்டது. முதுகில் தண்டுவடத்தில் எலும்பு விலகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.
சமீபத்தில் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவர் காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார்.
அவரது உடல்நிலை இயல்புக்குத் திரும்ப கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என அவரது குடும்ப டாக்டர் வற்புறுத்தியதாக தெரிகிறது.
டாக்டர்களின் பேச்சை மீறி, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜீத், வரும் டிசம்பர் பத்து முதல், சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் கலந்துகொள்ள இருப்பதால், அதற்கு முன்பு சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக