பெண்களே குதிக்கால் உயர செருப்பு போடுகிறீர்களா? இது உங்களுக்கான செய்திதான்!
உயரம் குறைவா இருக்கிறம் கொஞ்சமாவது உயரமாக காட்டவேண்டாமா என்று அனைத்து பெண்களுமே குதிக்கால் உயர செருப்பை அணிகின்றனர், இதன் மூலமான ஆபத்துகளை அறிவீர்களா ?
மனித உடலின் அமைப்புப்படி உடலின் பாரம் குதிக் காலிலேயே தாங்கப் படுகிறது, அடி உயரமான செருப்புகளால் உடலின் பாரம் உங்களது முன்னங்கால்களில் தாங்கப்படுகிறது, முன்னங்காலின் அமைப்பு உடலின் பாரத்தை தாங்காது, நாளைடைவில் பாதத்தின் முன் எலும்புகள் உராய்வடைந்து வலியையும் ஏற்படுத்துகிறது.
இதுமட்டுமல்லாமல் நேராக இருக்க வேண்டிய உடல் பின்பக்கமாகவும் வளைய ஆரம்பிக்கிறது, குதிக் காலுயர செருப்பணியும் பெண்களைப் பார்த்தீர்களானால் அவர்களின் பின்பக்கம் வழமையை விட சற்று பெருத்திருக்கும்.... அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.
உயரத்தில் மட்டுமே அழகிருந்தால் குள்ளமானவர்கள் இந்த உலகத்தில் வாழமுடியாது.
nenkal seruppai aniyirathupola unkalai seruppu anyumaaa?
பதிலளிநீக்கு