பல நாட்களாக பழகியும் காதலிக்க மறுத்த பல்கலை கழக மாணவியை கோடரியால் வெட்டி மாணவர் படுகொலை செய்தார். அரியானா மாநிலம் ஹிசாரில் குரு ஜம்பேஸ்வரர் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு பிடெக் முதலாண்டு படித்து வந்த மாணவி கீதிகா மேதா (20). பரீதாபாத்தை சேர்ந்தவர்.
இவரும், அதே பல்கலை கழகத்தில் படிக்கும் பிரதீப் (21) என்ற மாணவரும் நண்பர்களாக பழகினர். கீதிகா மீது பிரதீப்புக்கு காதல் ஏற்பட்டது. ஒருதலையாக காதலித்தார். தனது காதலை கீதிகாவிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க கீதிகா மறுத்து விட்டார். அதன் பிறகு பிரதீப்புடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்த கீதிகாவுடன் பிரதீப் வாக்குவாதம் செய்தார். அப்போது, இடுப்பில் வைத்திருந்த கோடரியை எடுத்து கீதிகாவை பிரதீப் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்த கீதிகா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
பிரதீபை போலீசார் கைது செய்தனர். ‘கீதிகா என்னுடன் நீண்ட நாட்களாக நட்பாக பழகினார். நான் காதலை சொன்ன பிறகு என்னிடம் பேசவில்லை. இதனால் மனதளவில் பாதித்தேன். அவருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்து கொலை செய்தேன்Õ என்று விசாரணையில் பிரதீப் கூறியுள்ளார். இந்த பல்கலை கழகத்தில் இதே பிரச்னை காரணமாக கடந்த ஆகஸ்டில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக