பிரித்தானியாவின் பேர்கொன் நகரத்தில் போதை பழக்கத்துக்கு ஆளான தாய் ஒருவர் தனது 16 மாத குழந்தையை 5 நாட்களாக வீட்டில் பூட்டி வைத்துவிட்டு ஊர்சுற்றப் போய், தற்பொழுது சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
ஐந்து நாட்களாக உணவு இன்றி, டைப்பர் மாற்றாமல் குழந்தை தவித்து கதறியுள்ளது. குழந்தையின் நிற்காத அலறல் சத்தத்தால் சந்தேகம் கொண்ட 20 வயதாகும் பெண்ணொருவர் பொலீசுக்கு கொடுத்த தகவலின் பிரகாரம் வீட்டை சோதனை செய்த பொலீசார், குழந்தையை மீட்டனர்.
வீட்டில் ஆங்காங்கே மது பாட்டில்களும், போதை ஊசிகளும் நிறைந்து காணப்பட்டனவாம். குறித்த பெண்ணை கைதுசெய்த பொலீசார், சிறுவர் வதை, போதைபொருள் ஒழிப்பு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தை காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக