தன்னை தனது பெற்றோர் துன்புறுத்துவதாக தனது வகுப்பு ஆசிரியரிடம் சிறுவன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது
மனைவி அனுபமா.
இவர்கள் நோர்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் சாய் ஸ்ரீராம், நோர்வேயில் உள்ள பள்ளியில் படிக்கிறான்.
இவனது ஒழுக்கம் குறித்து கவலை அடைந்த பெற்றோர், இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் தன்னை தனது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து பொலிசில் பள்ளி நிர்வாகம் புகார் அளிக்கவே, மாணவனின் பெற்றோரை பொலிசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் குடும்பத்தினர் கூறுகையில், ஏற்கனவே நோர்வே நாட்டு சிறார் நலப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீராமை தங்களது பொறுப்பில் கொண்டு சென்று ஒரு மாதம் வைத்திருந்தனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு ஹைபராக்டிவ் பிரச்சினை இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெற்றோரிடம் கொண்டு வந்து விட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்த சந்திரசேகருக்கு, நீதிமன்றத்தில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அங்கு சென்றவுடன் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த கைது குறித்து எங்களுக்கு நோர்வே தரப்பிலிருந்து எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உள்ளனர் என்றனர்.
தற்போது சாய் ஸ்ரீராம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மனநல மையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறான்.
0 கருத்து:
கருத்துரையிடுக