பாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா பம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, சில நாட்கள் மருத்துவமனையில் தங்கும் அவருக்கு சில மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, நேபாளின் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். விவாகரத்து பெற்ற 42 வயதான நடிகை மனிஷா, 1991ம் ஆண்டு சௌதாகர் என்னும் இந்தித் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார்
0 கருத்து:
கருத்துரையிடுக