தல அஜீத்தின் மச்சினியும், ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி. சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு தொலைக்காட்சியில் தலைகாட்டினார். திடீரென்று ஒரு நாள் காணாமல் போனார். அப்பா பாபுவிடம் விசாரித்தால். சிங்கப்பூரில் உள்ள லாசல் காலேஜ் ஆப் ஆர்ட்சில் சேர்ந்து பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். திரும்பி வந்து மீண்டும் நடிப்பார் என்று சொன்னார்.
ஆனால் ஷாம்லிக்கு ஏனோ நடிப்பில் ஆர்வம் இல்லை. தான் படித்த படிப்பை சென்னையில் செயல்படுத்த இருக்கிறார். பல வருடங்களுக்கு பின்பு கடைசியாக சிவாவின் திருணமத்தில்தான் தலைகாட்டினார்.
இப்போது சென்னையில் பிரமாண்ட பேஷன் ஸ்டோர் திறக்க ஏற்பாடு செய்து வருகிறார். அத்தான் அஜீத் இதற்காக தி.நகரின் முக்கிய இடத்தில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துமசுக்கு, அல்லது புத்தாண்டுக்கு கடை திறப்பு விழா இருக்கும் என்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக