ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டுஷ் மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அந்த சிறுமி அங்குள்ள ஒரு ஆற்றில் தண்ணீர் எடுத்து வந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் அவரை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றனர்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கொலையாளிகளில் ஒருவர் அந்த சிறுமியை திருமணம் செய்ய பெண் கேட்டார். அதற்கு சிறுமியும், அவரது குடும்பத்தினரும் மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது கூட்டாளியுடன் வந்து சிறுமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொடூர கொலை அங்குள்ள பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பொதுநல நிறுவனம் ஆக்பம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, ஆப்கன் பெண்களில் 87 சதவிகிதம் பேர் உடல்ரீதியான, மனரீதியான செக்ஸ் கொடுமைகள் மற்றும் கட்டாய திருமணம் போன்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
மேலும், கடந்த மாதம் 20 வயது இளம் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடாததால் அவளது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக