கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (30) மூங்கில் படல்கள் கட்டி விற்பனை செய்யும் தொழிலாளி. சம்பவத்தன்று அவர் போதையில் இருந்தார். அப்போது அவரின் எதிர்வீட்டை சேர்ந்த விவசாயத் தொழிலாளி தன் ஒன்றரை வயது
குழந்தையை அக்கா மகள் 8 வயது சிறுமியின் பாதுகாப்பில் விட்டு விட்டு மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு சென்றார். சிறுமி அக்குழந்தையை வீட்டிற்குள் படுக்க வைத்துவிட்டு வெளியே சக சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது போதையில் எதிர்வீட்டிற்குள் நுழைந்த சுரேஷ் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்தார். குழந்தை வீறிட்டழுதது. சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்த சிறுமியையும் சத்தம் போட்டால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட்டு தப்பினார். ஆபத்தான நிலையில் இருந்து குழந்தைக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக குழந்தையின் தந்தை காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேசை கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
சுரேஷுக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையுடன் அத்துமீறி வீட்டில் நுழைந்ததற்கு 3 வருடம் சிறை ரூ.1000 அபராதமும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட போது சுரேஷின் மனைவி தன் 3 குழந்தைகளை சுமந்து கொண்டு கண்ணீருடன் நீதிமன்றத்தில் நின்றிருந்தார். சிறைக்கு செல்லும் முன் சுரேஷ் தன் குழந்தைகளை பார்த்து கண் கலங்கினார்.

0 கருத்து:
கருத்துரையிடுக