புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சங்கானை மேற்கில் சாந்தை எனும் ஒரு கிராமம். 1950களின் பிற்பகுதியில் "இந்து சபை"க்கு தலமையான இராசரத்தினம் முகாமையில் கிராமங்கள்தோறும் சைவ அபிவிருத்திச் சங்கம் சைவப்


பாடசாலைகள் ஆரம்பித்தது. அச்சமயம், திரு.நா. சிதம்பரப்பிள்ளை முன்வந்து மனமுவந்து சாந்தைக் கிராமத்தில் தனது 12 பரப்புக் காணியை அங்கே பாடசாலை ஒன்று ஆரம்பிப்பதற்காகக் கையளித்தார். பிள்ளைச் செல்வம் இல்லாத திரு.நா.சிதம்பரப்பிள்ளை வருங்காலச் சிறார்க்குக் கொள்ளைக் கல்விச் செல்வத்தை அவ்வூர் வருங்காலச் சிறார்க்குக் கொடுக்க உதவிய கொடைவள்ளல்!

17ந் திகதி தைமாதம் 1959 இல் சாந்தையில் ஒரு பாடசாலை நிறுவப்பட்டது. திரு.நா.சிதம்பரப்பிள்ளை தனது தாய்வழிப் பேரனான சிற்றம்பலம் என்பவரின் பெயரையே அப் பாடசாலைக்குப் பெயராகச் சூட்டினார். அன்றிலிருந்து இன்றுவரை அப்பாடசாலை சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை என்ற பெயருடன் அரும்பணி ஆற்றிவருகிறது. இன்று புதுப் பொலிவுடன் அப்பாடசாலை காட்சி தருவதைக் கீழே காணலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top