புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ். மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் மட்டும் 9 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் அண்மைக் காலங்களில் குறுகிய நாள்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகளவான துஷ்பிரயோகச் சம்பவங்களாக இவை பதிவாகியுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் இந்த வார ஆரம்பத்தில் இருந்து அடுத்து வந்த 3 தினங்களில் குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.
 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்
 “உறவினர் முறை உள்ளவர்களால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள், காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிப் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கப்பட்டவர்கள் மற்றும் இனந்தெரியாதவர்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டவர்கள் ஆகியோரும் இவர்களில்அடங்குவர்.

இந்தச் சம்பவங்களுடன் இதுவரையில், யாழ்.மாவட்டத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 100 ஐ அண்மித்துள்ளன” என்று வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top