யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் ஊடாக அளவெட்டி செல்லும் பேருந்தில் பெண்களிடம் சேஷ்டை செய்த நான்கு பேரை தடுக்க முயன்ற சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகத்திலிருந்து பேருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, மது போதையில் பேருந்தில் ஏறிய நான்கு பேர், அதில் இருந்த இருந்த பெண்களுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார்கள்
இதனை அவதானித்தபேருந்தின் சாதியும், நடத்துனரும் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, குறித்த நான்கு பேரும் சாரதி மற்றம் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திவிட்டு குறித்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சாரதியும் நடத்துனரும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக