ஆவடி நேரு நகர் கணபதி கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (25), கட்டிட தொழிலாளி. மனைவி விஜயலட்சுமி (19). திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் சொந்த ஊர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் திருமணம்
நடந்தது. நேற்று மாலை வீரமணி வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவருக்கு விஜயலட்சுமி தோசை சுட்டு கொடுத்துள்ளார். போதுமான தோசையை கொடுக்காததால் மனைவியை வீரமணி திட்டிவிட்டு வெளியே சென்றார். அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது விஜயலட்சுமி, தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து வீரமணி திடுக்கிட்டார். தகவல் கிடைத்ததும் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விஜயலட்சுமி உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி, ஆர்டிஓ விசாரணை நடக்கிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆவடி போலீசார், வீரமணியிடம் விசாரணை நடத்துகின்றனர். புதுப்பெண் தற்கொலை செய்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
0 கருத்து:
கருத்துரையிடுக