புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா திரைப்பட  நடிகைகளில் திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்

காதல் எப்போது, எப்படியெல்லாம் வரும் என்று சொல்லவே முடியாது என்று சொல்வார்கள். மேலும் அந்த “காதலுக்கு கண்ணில்லை” என்ற ஒரு பழமொழி கூட உள்ளது. இவை அனைத்தையும் நம்பாதவர்கள் நிச்சயம் நம்பித் தான் ஆக வேண்டும். எதை வைத்து நம்புவது? என்று கேட்கலாம்.

இதுவரை காதல் செய்ய பெண்களுக்கு தைரியம், நம்பிக்கை எதுவுமே இல்லை என்று தான் நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில் பெண்களுக்கு தைரியம் மிகவும் அதிகம் தான். அதிலும் மேலே சொன்ன பழமோழி ஆண்களுக்குத் தான் பொருந்தும் என்று தவறாக நினைத்துள்ளோம். உண்மையில் அந்த பழமொழி பெண்களுக்குத் தான் பொருந்தும்.

அந்த காலத்துப் பெண்கள் காதல் செய்யும் போது தனக்கு வருபவர், தனக்கே சொந்தமானவராய் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் காதல் அவ்வாறு மட்டும் வராது, எந்த வயதிலும், யார் மீதும் வரும் என்பதை நமது திரையுலகில் உள்ள நடிகைகள் நிரூபித்துள்ளனர்.

மேலும் இந்த வகையான காதல் பாலிவுட்டில் மட்டுமின்றி, கோலிவுட்டிலும் நடந்துள்ளது. அதிலும் இதில் என்ன கொடுமையென்றால், இவ்வாறு திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகளை பார்த்தால் நம்பவே முடியாத அளவில் இருக்கும். ஒருவேளை இதை வைத்து தான் “காதலுக்கு கண்ணில்லை” என்று சொன்னார்களோ!!! சரி, இப்போது எந்த நடிகைகள் அவ்வாறு காதல் செய்தனர் என்பதைப் படித்துப் பாருங்களேன்…



நயன்தாரா – பிரபுதேவா

கொஞ்ச நாட்களுக்கு முன்பு பதற்றமாக இருந்த காதல் ஜோடிகளில் கேரள நடிகையான நயன்தாரா, ஏற்கனவே திருமணமான பிரவுதேவாவுடன் காதல் வயப்பட்டிருந்தார் என்பது தான். இதில் என்ன கொடுமையென்றால், ஏற்கனவே பிரபுதேவா அவரது மனைவி ரம்லத்தை காதல் திருமணம் செய்து கொண்டவர். என்ன கொடுமை சார் இது?


ராதிகா – சரத்குமார்

பழங்கால தமிழ் நடிகையான ராதிகா ஏற்கனவே திருமணமானவர். அவர் ஏற்கனவே திருமணமான தமிழ் நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை காதல் செய்து மணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

ஹேமா மாலினி – தர்மேந்திரா

மிகவும் சர்ச்சைக்குரிய திருமணமான ஹேமா மாலினி – தர்மேந்திரா ஜோடிகள் இன்னும் சந்தோஷமாக வாழ்கின்றனர். இதில் தர்மேந்திராவிற்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். பின் அவர் தனது கனவுக்கன்னியான ஹேமாவை திருமணம் செய்து கொள்ள இஸ்லாமியராக மாறி, திருமணம் செய்து கொண்டார்.

கரீஸ்மா கபூர் – சஞ்சய் கபூர்

கரீனா கபூரின் மூத்த சகோதரியான கரீஸ்மா கபூரும், தொழிலதிபரான சஞ்சய் கபூரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா

பாலிவுட்டின் ஹாட் மற்றும் அழகான நடிகையான ஷில்பா, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள தொழிலதிபரான ராஜ் என்பரின் மீது காதல் கொண்டு, தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

டிம்பிள் கபாடியா – சன்னி தியோல்

மிகவும் பிரபலமான ஒரு கள்ளக்காதல் விவகாரத்தில் டிம்பிள் கபாடியா – சன்னி தியோல் ஜோடியும் ஒன்று. கவர்ச்சி நடிகையான டிம்பிள் ராஜேஸ் கண்ணாவையும், சன்னி பூஜாவையும் திருமணம் செய்திருந்தனர். இருப்பினும் இருவருக்கிடையில் ஒருவித காதல் ஏற்பட்டு, இறுதியில் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர்.


ஸ்ரீதேவி – போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி, திருமணமாகி 2 குழந்தைகளைக் கொண்ட போனி கபூரைக் காதலித்து, தற்போது அவரை மணந்துள்ளார்.


ரேகா – அமிர்தாப் பச்சன்

ஜெயா பச்சனை மணந்த அமிர்தாப் பச்சனுக்கு, நடிகை ரேகாவுடன் காதல் இருந்தது அனைவருக்குமே நன்கு தெரியும். அதிலும் சில்சிலா படம் நினைவிருக்கிறதா?

கரீனா கபூர் – சாய்ப் அலிகான்

அம்ரிதா சிங்கை திருமணம் செய்து, 2 குழந்தைகளைக் கொண்ட சாய்ப் அலிகான் தம்பதிகள் விவாகரத்து செய்து கொண்ட பிறகு, சாய்ப் அலிகான் கரீனா கபூரை மணம் புரிந்தார்.

ராணி முகர்ஜி – ஆதித்யா சோப்ரா

ஆதித்யா சோப்ரா முதலில் பாயல் கண்ணாவை திருமணம் செய்து, 8 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்துள்ளார். அத்தகையவர் மீது ராணி முகர்ஜி காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top