புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாகை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 7ம் வகுப்பு மாணவிக்கு நூதனமுறையில் காதல் கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமருகல் - ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பால்மோகன். இவர் அதே பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதினார் என்பது குற்றச்சாட்டு.

இந்த ஆசிரியர் கடிதம் எழுதிய முறையே வித்தியாசமாக் இருந்தது. அதாவது நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதை அப்படியே தமிழில் சொல்லாமல், naan unnai kadalikkiren என்று சொல்வது போல தமிழை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்துள்ளார்.

அந்த மாணவிக்கு வாத்தியார் எழுதியது புரியாமல் அதை தனது வகுப்பு ஆசிரியரிடம் காண் பிக்கவே அதனை படித்த வகுப்பு ஆசிரியர் ஷாக் ஆகி, தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுத்து புகார் அளித்துள்ளார்.

இதை அடுத்து அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். பள்ளி ஆசிரியர் ஒருவர் 14 வயது மாணவிக்கு நூதன முறையில் காதல் கடிதம் எழுதிய சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top