புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆம்! முதல் தடவையாக நயன்தாரா ஒரு படத்தில் கர்ப்பிணியாக நடிக்கவிருக்கிறார், ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி தமிழில் ரீமேக் ஆகவிருப்பது தெரிந்ததே இந்த கேரக்டரில் நடிக்க முதலில் பிரபல நடிகைகளான தமன்னா,
அனுஷ்கா ஆகியோரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

ஆனால் அவர்கள் கர்ப்பிணி கேரக்டர் என்றதால் உடனே நடிக்க மறுத்து விட்டார்களாம். ஆனால் நயன்தாராவிடம் போய் கேட்டபோது உடனே சம்மதம் சொன்னார்.

அதற்கு காரணம் இந்தப்படத்தின் கதை ஹீரோயினிக்கு அதிக முக்கியத்துவத்துடன் இருப்பதால் தான் என்கிறார் நயன்தாரா. அதாவது ஒரு கர்ப்பிணி மனைவி காணாமல் போன தனது கணவனை தேடி அலைவது போல் இந்தப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாம்.

பிரபல டைரக்டர் சேகர் கம்லா டைரக்‌ஷன் செய்யும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top