புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு - கல்லடி கடற்கரைக்கு நேற்று திங்கட்கிழமை குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


மட்டக்களப்பு - கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந் மட்டக்களப்பு மஞ்சன்தொடுவாய் கடற்கரை நீர் ஓடைக்கு அருகாமையிலுள்ள நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் இன்று (29) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இம்மாணவனின் சடலத்தை பார்வையிட பெருமளவிலான பொது மக்கள், இளைஞர்கள், குடும்ப உறவினர்கள், மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் இம்மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் ஜெகநாதன் டிலுஷ்காந்தின் குடும்பத்துக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





மட்டக்களப்பு கல்லடி தியேட்டருக்கு அருகாமையில் வசிக்கும் குறித்த மாணவன் இம்முறை 2012ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top