வவுனியாவிலுள்ள திருமண மண்டம் ஒன்றில், திருமண வைபவத்திற்காக சமைக்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டதையடுத்து, மண்டபத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் ஒன்று இடம்பெற்றது. அங்கு பரிமாறப்பட்ட உணவுகளில் அதிகளவான புழுக்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்கள் திருமண மண்டபத்திற்கு வருகை தந்து, அங்கு சமைக்கப்பட்ட உணவுகளை பரிசோதனை செய்தபோது, உணவில் புழுக்கள் காணப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, உணவின் மாதிரிகளை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அத்துடன், மண்டப உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.
எனினும், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் சமூகமளிக்காததையடுத்து, அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக