இத்தாலியில் இருந்து வந்த பார்சலில் 18 மனித தலைகள் இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் ஓஹரே என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு வரும் சரக்குகளை எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்த பின்பு விநியோகம் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வந்த ஒரு பார்சலை எக்ஸ்ரே எடுத்த போது, பதப்படுத்தப்பட்ட 18 மனித தலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இத்தாலியின் ரோம் நகருக்கு மனித தலைகள் அனுப்பி வைக்கப்பட்டதும், ஆராய்ந்து முடிந்ததும் அதை திருப்பி அனுப்பியதும் தெரியவந்தது.
இந்த குழப்பத்திற்கு முறைப்படி சரியான ஆவணங்கள் இல்லாததே காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக