பிரித்தானியாவில் மத்திய லண்டனின் வாக்ஸ்ஹால் ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு கட்டடத்தின் கிரேன் மீது மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது.
தேம்ஸ் நதிக் கரையில் உயரமான ஒரு கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த கிரேன் மீது இந்த ஹெலிகாப்டர் லண்டன் நேரப்படி இன்று காலை 7.50 மணியளவில் மோதியது.
இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையை நோக்கிப் பாய்ந்து சாலையில் விழுந்து சிதறியது. இதில் அந்த ஹெலிகாப்டர் தீப்பற்றிக் கொண்டது.
இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே தான் பிரிட்டனின் உளவுப் பிரிவான MI6-ன் தலைமை அலுவலகம் உள்ளது.கடும் பனிமூட்டம் காரணமாக அந்தக் கட்டடத்தின் மீதிருந்த கிரேன் ஹெலிகாப்டரின் பைலட்டுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் பைலட் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
இது ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அல்ல என்று இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக