புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நிலவை ஆராய்ச்சி செய்ய ஆளில்லா விண்கலத்தை வருகிற 2015ஆம் ஆண்டு அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

நிலவில் தண்ணீர் உள்ளதா, அங்குள்ள சீதோஷ்ண நிலை என்ன, மனிதன் அங்கு உயிர் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வரும் 2015ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி நிலவை ஆராய்ச்சி செய்ய ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த விண்கலத்துக்கு லூனா குளோப் அல்லது மூன் குளோப் என்று பெயரிடப்பட்டுள்ளது என விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோமாஸ் இயக்குனர் விளாடிமிர் போபோவ்கின் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் வகையில் புதிய ஏவுதளத்தை அமுர் பகுதியில் ரஷ்யா கட்டி வருகிறது. இந்த இடத்திலிருந்து மூன் குளோப் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும்.

நிலவில் தரையிறங்கி இந்த விண்கலம் ஆய்வு செய்யும், அங்கு சேகரிக்கும் சேம்பிள்களின் ரசாயன தன்மை குறித்து தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பி வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top