புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெலண்டைன்ஸ் டே என அழைக்கப்படும் காதலர் தினத்தை, “மாத்ரி பித்ரி பூஜன் திவஸ்” என தாய் தந்தையரை பூஜிக்கும் தினமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில அரசுக்குக் அசாராம் பாபு, கோரிக்கை விடுத்துள்ளார்.


டெல்லி மாணவி ஒரு குழுவால் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், இதற்குக் காரணம் மேற்கத்திய கலாசாரம் என்றும், சகோதரத்துவ உணர்வு மங்கிப் போய்விட்டது என்றும் கருத்துக் கூறி பிரபலம் அடைந்தவர் தான் இந்த சாது அசாராம் பாபு.

இப்போது இந்தக் கருத்தைக் கூறி, உ.பி. மாநிலத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் அவர், உத்திரப் பிரதேசத்தின் மிக இளைமையான முதலமைச்சராகத் திகழும் அகிலேஷ் யாதவுக்கும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சதீஷ்கர் மாநில அரசு கடந்த 2012ம் வருடம், காதலர் தினத்தை மாத்ரி பித்ரி பூஜன் திவஸாக அறிவித்து இளைஞர்களை பெற்றோர் பக்கம் கவனத்தைச் செலுத்துமாறு செய்ததைப் போல், உத்திரப் பிரதேசமும் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இவ்வாறு அறிவிப்பது, நாட்டுக்கே ஒரு எடுத்துக் காட்டாக அமையும். இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு நெறிதவறிப் போய், பெண்கள் வன்கொடுமை போன்ற துன்பங்களுக்கு ஆளாவது தடுக்கப்பட வேண்டும் என்றால், காதலர் தினம் போன்ற மேற்கத்திய கலாசார கொண்டாட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top