புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒரிசாவில் 3 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஒரிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் புதியபளி கிராமத்தைச் சேர்ந்தவர் திடு முண்டா (30).

அவர் கடந்த அக்டோபர் மாதம் 4ம் திகதி அதே ஊரைச் சேர்ந்த 3 வயது பழங்குடியின சிறுமியை உணவு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

அவர் அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்து அந்த கிராமத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் கழித்து உடல் அழுகிய நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் முண்டாவை கடந்த அக்டோபர் மாதம் 13ம் திகதி கைது செய்தனர்.

அவர் மீது கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சம்பல்பூர் மாவட்ட நீதிபதி அசோக் குமார் பாண்டா (விரைவு நீதிமன்றம்) முண்டாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top