புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அவுஸ்திரேலியாவில் புதையலை தேடிக் கொண்டிருந்த நபருக்கு, 5 கிலோ தங்க கட்டி கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தின் பாலார்ட் என்ற நகருக்கு அருகே மெட்டல் டிடெக்டரின் உதவியுடன் புதையலை நபர் ஒருவர் தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது தரைக்கு கீழே இரண்டடி ஆழத்தில் உலோக கட்டி இருந்ததால் பீப் என்ற ஒலி எழுந்தது.

இதனையடுத்து அந்த இடத்தை தோண்டி பார்த்ததில், சுமார் ஐந்தரை கிலோ எடையுள்ள தங்க கட்டி கிடைத்தது, இதன் விலை 3 லட்சம் டொலர்களுக்கு மேல் என்று கருதப்படுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் சூடுபிடித்த தங்க வேட்டையின் போது, இந்த இடம் தங்கம் தேடுவோர் மத்தியில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top