புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாலியல் பலாத்காரத்தை பெண்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்த இந்தோனேஷிய நீதிபதியின் பேச்சார் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தோனேஷியாவின் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்க்காணல் நடைபெற்றது.

அப்போது நீதிபதி முகமது டாமிங் சனுசி என்பவரிடம், கற்பழிப்பு குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமா? என நேர்காணல் நடத்தும் குழுவினர் கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கையில், பலாத்காரம் செய்யும் நபரும், அதனால் பாதிக்கப்படும் நபரும் இதை விரும்பும் பட்சத்தில் இக்குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி இரண்டு முறை யோசிக்க வேண்டும். பாலியியல் பலாத்காரத்தை பெண்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் கூறினார்.

நீதிபதியின் இந்த பதில் நேர்காணல் நடத்தும் நிபுணர்கள் மத்தியில், சிரிப்பை வரவழைத்தது. பின் தான் தெரிவித்த கருத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் நீதிபதி சனுசி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top