இங்கிலாந்தில் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாமல் தவித்த கணவருக்கு, 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசித்து வருபர் ஸ்காட் யங்(வயது 51).
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு மிச்செலி(வயது 48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் பிரிந்து விட்டனர்.
இதனையடுத்து இழப்பீடு கேட்டு மிச்செலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனது மனைவிக்கு மாதம் 27,500 பவுண்டு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இந்த தொகையை தன்னால் வழங்க முடியாது என ஸ்காட் யங் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து மீண்டும் மனைவி மிச்செல் வழக்கு தொடர்ந்ததால், கோபமடைந்த நீதிபதி ஸ்காட் யங்குக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இறுதி விசாரணையை சில மாத காலத்திற்கு தள்ளிவைத்தும் தீர்ப்பளித்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக