புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இறந்த தனது எஜமானி உயிருடன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் நாயொன்று பிராரத்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தேவாலயம் செல்லும் சம்பவமானது இத்தாலியில்
இடம்பெற்றுள்ளது.

ஜேர்மன் செபர்ட் இனத்தை சேர்ந்த லோயல் டொமி எனறு அழைக்கப்படும் 7 வயது நாயே இவ்வாறு தேவாலயத்திற்கு செல்வதை வழக்கமாகிக்கொண்டுள்ளது.

டொமியை கடந்த 7 வருடங்களாக வளர்த்து வந்த அதனது எஜமானியான மரியா மார்கிரட் ரொச்சி என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது இறுதி கிரியைகள் மேற்படி தேவாலயத்திலே இடம்பெற்றுள்ளது.  இவரது இறுதி மரண ஊர்வலத்தில் டொமியும் கலந்துகொண்டிருந்தது.

அன்றிலிருந்து டொமி தன்னை கைவிட்டு சென்ற தனது எஜமானி மீண்டும் உயிருடன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் மேற்படி தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்வதாக பலர் தெரிவித்துள்ளனர்.

டொமி பிரார்த்தனைக்காக ஆலயத்திற்கு செல்லும் போது மேற்படி ஆலயத்தின் பாதிரியார் டொமியை திட்டடிவிடாமல் கருணையுடன் கண்கானிக்கின்றார்.

டொமியும் ஏனையவ பக்தர்களுக்கு இடையூறை விழைவிக்காமல் பிரார்த்தனையின்போது ஒரு ஓரமாக அமர்ந்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

'ஒவ்வொரு நாளும் நடக்கும் பிரார்த்தனை  கூட்டத்தில் டொமி கலந்துகொள்கிறது. அதனது நடத்தைகள் அற்புதமானவை.


பிரார்த்தனையின்போது சத்தமிடாமல் அமைதியாக இருக்கும். இதுவரை ஆலயத்தில் அது குறைத்ததை நான் கேட்டதில்லை. இங்கு வரும் பக்தர்களும் டொமி குறித்து என்னிடம் முறையிட்டதில்லை. தனது எஜமானியின் மீது இத்தகைய அன்பு வைத்திருக்கும் டொமியை என்னால் வெளியே போ என்று கூறமுடியாது என' தேவாலயத்தின் பாதிரியார் டொனேடோ பான்னா தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top