சீனாவில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 600 பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள சாங்ஷா என்ற
இடத்திலிருந்து, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இறைச்சிக்காக 600க்கும் அதிகமான பூனைகள் 50 மூங்கில் கூடைகளில் அடைத்து எடுத்து செல்லப்பட்டன.
பூனைகளை சுமந்து சென்ற லாரி நேற்று ஒரு இடத்தில் திடீரென விபத்துக்குள்ளாகி நின்றுவிட்டது.
உடனடியாக லாரி மீட்கப்படாததால், பட்டினி கிடந்ததில் 100 பூனைகள் இறந்து விட்டன.
இதனால் துர்நாற்றம் வீசியதால் தகவலறிந்த மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள் மீதமுள்ள பூனைகளை மீட்டுள்ளனர்.
இந்த பூனைகளை பாதுகாக்கும் பொருட்டு அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக