புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மூவருள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் தலை மறைவாகியுள்ளதாகவும் நெலுவ பொலிஸார்
தெரிவித்தனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சம்பவ தினமான கடந்த 14ஆம் திகதி திங்கட்கிழமை சிறுமி லயன் அறையில் நித்திரை செய்து கொண்டிருந்த போது நள்ளிரவு 12 மணியளவில் மூவர் வந்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

எனது தந்தை இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன, தாய்க்கு இரண்டு மாதக் குழந்தையொன்று உள்ளது.

தாய் குழந்தையுடன் வீட்டிலிருப்பதால் தான் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பதாகவும் மேற்படி காமுகர்களுக்கு தனது மாமியாரே உதவி புரிந்ததாகவும் அச்சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நெலுவ பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

அடுத்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். அவரைத்தேடி நெலுவ பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top