மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரண்
மனைவியை நடு வீதியில் வைத்து கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்த கொடூரச் சம்பமொன்று நீர்கொழும்பு சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ளவெலிஹேன 18 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை போலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹினி துஷாரி (வயது 29) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொடூரமான முறையில் கொலையுண்டவராவார். இரத்த வெள்ளத்தில் வீதியோரத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரதான வீதியில் ஒன்று கூடியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டனர்.
இதேவேளை மனைவியை கொலை செய்த நபர் கத்தியுடன் கொச்சிக் கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.