யக்கலமுல்லவில் குழந்தையை பெற்ற அடுத்த நிமிடமே கொன்று புதைத்த பெண் கைது!
குழந்தையை பெற்று அடுத்த நிமிடமே அதனை கொலை செய்து மண்ணில் புதைத்த கொடூர பெண்ணொருவர் யக்கலமுல்ல பகுதியில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் தற்போது மஹமோதர வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.