கொச்சிக்கடையில் இரு பிள்ளைகளின் இளம் தாய் கணவரால் அடித்துக் கொலை!
குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் தனது கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கொழும்பு – சிலாபம் பிரதான வீதி கொச்சிக்கடை 26ம் கட்டை பகுதி வீடொன்றில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 30 வயதுடைய இளம் தாயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (04) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.