இந்தோனேசியாவில் இரண்டு பக்கம் கால் போட்டு பைக்கில் பெண்கள் செல்ல தடை!
பைக்கில் இரண்டு பக்கம் கால் போட்டு பெண்கள் செல்வதற்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ஷரியத் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பாண்டா ஏஸ் மாகாணத்தில் உள்ள லோக்சூமாவே நகர மேயர், பெண்களுக்கு மேலும் கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளார். அதன்படி, பெண்கள் இறுக்கமான பேன்ட் அணிய கூடாது, கள்ளக்காதல், விபசாரம், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட கூடாது.
மேலும், ஆண்களு டன் பைக்கில் செல்லும் போது, இருக்கையின் பின்பக்கம் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து செல்ல கூடாது. அப்படி உட்காருவது சரியில்லை. ஒரு பக்கமே இரண்டு கால்களையும் வைத்துக் கொண்டு பைக் சீட்டில் உட்கார்ந்து செல்ல வேண்டும் என்று மேயர் சுயாதி யாஹ்யா கூறினார். எனினும் இரண்டு பக்கமும் கால் போட்டு பெண்கள் பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால், பைக் ஓட்டும் போது முஸ்லிம் பாரம்பரியப்படி உடை அணிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.