புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிம்பு தனுஷை ஃபாலோ பண்றாரா இல்லை தனுஷ் சிம்புவை ஃபாலோ பண்றாரான்னு ஒரு ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணலாம். இப்ப அதுல ஒரு விசயத்தை பார்க்கலாம்.


விஜய்டிவியில் ‘லொள்ளுசபா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை வம்படியாகக் கூப்பிட்டு தனது ‘மன்மதன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சிம்பு.

ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் “சிம்பு உங்களுக்கு அறிவில்லையா?” என்று திட்டியும் கூட சிம்பு சந்தானத்தை அந்தப்படத்தில் நடிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல் அவர் நடித்த அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.

அப்படிப்பட்ட சந்தானம் தான் இன்று தமிழ்சினிமாவில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதனால் யார் கால்ஷீட் கேட்டாலும் ஒரு நிமிடம் யோசிக்கும் சந்தானம் சிம்பு கேட்டால் மட்டும் எந்தவிதமான யோசனையும் இல்லாமல் உடனே கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தான் ஹீரோவாக நடிக்கும் எல்லாப்படங்களில் கூடவே சந்தானத்தையும் கூட்டிப் போய்க் கொண்டிருக்கிறார் சிம்பு.

இப்போது சிம்புவின் இதே பாணியைத்தான் தனுஷும் ஃபாலோ பண்ண ஆரம்பித்திருக்கிறார். ஆமாம், தனது மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் ரிலீஸான 3 படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு சின்ன ஃப்ரெண்ட் கேரக்டரில் நடிக்க வைத்த தனுஷ் இனி தான் தமிழில் ஹீரோவாக நடிக்கும் எல்லாப் படங்களில் அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் சிம்புவை விட ஒருபடி மேலே போய் தனுஷ் சிவகார்த்திகேயனை ஹீரோவாகப் போட்டு ‘எதிர்நீச்சல்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியாஆனந்த் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிக்கும் படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் பேசினார் உடனே தனது படத்தில் அந்த பஞ்ச் டயலாக்குக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு டயலாக் வைப்பார் சிம்பு. தனுஷ் ஒய் திஸ் கொலவெறி என்ற ஹிட் பாட்டை கொடுத்தவுடன் அதற்கு பதிலடியாக சிம்பு ஒரு ஆந்தம் பாடலை யு-டியூப்பில் ரிலீஸ் செய்தார்.

இப்படி பதிலுக்குப் பதில் எல்லா வேலைகளையும் செய்யும் சிம்பு அடுத்து என்ன செய்யப்போகிறார்? சந்தானத்தை வைத்து ஒரு படம் தயாரிப்பாரா..என்ன? 
 
Top